Skip to main content

அரசு மருத்துவமனையில் அன்னதான திட்டம்; துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Minister E. Periyasamy launches food program at Government Hospital
                                                     கோப்புப் படம்

 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தமிழக அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

 

இந்தத் திட்டத்தைத்  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று துவக்கி வைத்தார்.  அப்பொழுது அவர் பேசுகையில், “நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் பழனி அரசு மருத்துவமனைகளில் தலா 2,500 பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும். 

 

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான 39 திருக்கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த  கோயில்களில் கரோனா  தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அன்னதானம் திட்டம் தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அன்னதானம் பொட்டலமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், மருத்துவமனை இணை இயக்குனர் சிவக்குமார், மருத்துவமனை சூப்பிரண்டு டாக்டர் சுரேஷ் பாபு, மாவட்டத் துணைச் செயலாளர் தண்டபாணி, மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர்  ஜெகன்,  நகரச் செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 

 

சார்ந்த செய்திகள்