திமுக கூட்டணியில் சீட் எதிர்பார்க்காமல் தேர்தல் பணிகளை மேற்கொண்டு, சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் செய்தது மனிதநேய மக்கள் கட்சி. கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது சீட் ஒதுக்கப்படவில்லை என்பதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரிடம் அதிருப்தி ஏற்பட்டாலும், மோடி தலைமையிலான பாஜக எதிர்ப்பு என்ற நோக்கத்துடன், திமுக கூட்டணியை ஆதரிக்கும் முடிவை மனிதநேய மக்கள் கட்சி எடுத்தது.

Advertisment

mh jawahirullah mk stalin

Advertisment

அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உங்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்புகள் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். தற்போது மாநிலங்களவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் சிறுபான்மை நலன் காக்கும் குரலை திமுகவின் ஆதரவுடன் எடுத்துரைக்க இந்த வாய்ப்பு பயன்படும். ஏற்கனவே மதிமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என திமுக ஒதுக்கியுள்ள நிலையில், மற்றொரு கூட்டணிக் கட்சிக்கான வாய்ப்பை பரிசீலிப்பது ஸ்டாலினின் கையில் உள்ளது. திமுகவினரிடமும் மாநிலங்களவை மீதான எதிர்பார்ப்பும் போட்டியும் அதிகரித்துள்ளது.