/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manickam-art-1.jpg)
ராகுல் காந்தியைபிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் எனக்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தேர்தலானது அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில்தனியார் அமைப்பு மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் இணைந்து பிரதமர் பதவிக்கான தகுதியானநபர் யார் என்பது குறித்து மக்களின் மனநிலையை அறியகருத்துக் கணிப்பு ஒன்று நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பானது 19 மாநில மக்களிடம் நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடிக்கு 43 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 27 சதவீதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கருத்துக் கணிப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்தனது ட்விட்டர் பதிவில், "இந்த கருத்துக் கணிப்பில் இரண்டு காரணிகள் கவனிக்கத்தக்கவை. 34 சதவீத இந்தியர்கள் ராகுல் காந்தியைநம்புகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டைஒப்பிடுகையில் காங்கிரஸ்கட்சியானது 10 சதவீதம் கூடுதலாக இந்த கருத்துக் கணிப்பில் வாக்குகளைப் பெற்றுள்ளது. அடுத்த 10 மாதத்தில் நாம் இன்னும் கூடுதலாக 10 சதவீதத்தைஅடைய வேண்டும். ராகுல் காந்தியைபிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)