சவூதி அரேபியா ரியாத் மத்திய மண்டலம் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் காணொளி வாயிலாக நடத்திய கருத்தரங்கில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு உரையாற்றினார். அது பற்றிய அவரது அறிக்கையில்... உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு 1992 டிசம்பர் 06 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது மற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை சட்டமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 68 வது நினைவுநாள் குறித்தும் தமிழ் நாட்டில் நிலவும் மதச் சகிப்புத்தன்மை குறித்தும் உரையாற்றினேன்.
கற்பி, புரட்சி செய், ஒன்று சேர் என்று வார்த்தை வரிகளை வாழ்வியல் நெறியாக கொண்ட இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை சட்ட மேதை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தது 65 ஆண்டுகள்தான் அவர் மறைந்து 68 ஆண்டுகள் உருண்டோடி விட்டது இன்றும் அவரின் தேவை மிகுதியாக தேவைப்படுகிறது.
சிலைவழிப்பாட்டை மறுதலிக்கும் இஸ்லாம் ஆனால் நினைவுபடுத்துகின்றேன் உலகம் அதிகம் சிலை வைத்தது புத்தருக்கு, இந்திய அதிகம் சிலைவைத்தது அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, தமிழ்நாடு அதிகம் சிலைவைத்தது தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு, இந்து மதத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகளின் காரணமாக நான் இந்துவாக பிறந்து இருந்தாலும் இறக்கும் போது இந்துவாக இறக்கமாட்டேன் என்று தானும் தன் மகளையும் பெளத்த மதம் தழுவச் செய்தது.
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் ஆழகால் ஊன்ற மேற்கொண்டு யுக்திகளில் ஒன்று மதமோதல்களை கிளறிவிட்டு இனவாத சிக்கலை உருவாக்கி நீண்ட நிலைத்த ஆட்சியை நடத்த திட்டமிட்டதின் விளைவு அயோத்தி பாபர் மசூதி பிரச்சினை தொடங்குகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காவிரி படுகையின் தஞ்சை நெற்களஞ்சியம் போன்று கங்கை நதி பாய்ந்துதோடும் அயோத்தி சமஸ்தானத்தின் நெற்களஞ்சியத்தை கைக்கொள்ள பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி அரசு மேற்கொண்ட சூழ்ச்சி வளை தொடங்கி பாபர் மசூதி இடிப்பு வரையிலான மதவாத அரசியல் இதில் தலைவர் வைகோ எம்பி அவர்கள் 1990, 91, 92 வரை நாடாளுமன்றத்தில் எழுப்பிய வரலாற்று சிறப்புமிக்க உரைகளை மேற்கோள் காட்டி உரையாற்றினேன்.
மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில் மீட்புப் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜாவஹீருள்ளா MLA அவர்கள் பங்கேற்று தொடர் முழக்கப் போராட்டத்தில் பங்கேற்று கட்சி வித்தியாசம் பாராமல் மக்களின் வழிபாட்டு உரிமையை மீட்டுத்தர ஒரு பக்கம் அப்போதைய பாஜக தலைவர் தற்போது மேதகு ஆளுனராக இருக்கும் இல.கணேசன் அவர்களின் கரம் பற்றி மறுபக்கம் விசிக தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் எம்பி அவர்களின் கரம் பற்றி இந்து மத வழிபாட்டு உரிமைக்காக போராட்ட களத்திற்கு வந்ததை நன்றி யோடு நினைவுகூர்ந்து பேசினேன்.
இதைப் போன்ற ஜனநாயக சக்திகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினேன் இந்த தகவலை நேற்றே பதிவு செய்து இருக்க வேண்டும் ஆனால் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் நூர் அவர்கள் டிசம்பர் 06 தேதி என்று தான் ஒப்புதலைப் பெற்றார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நான் பேசி முடிக்கும் போது இரவு 11 30 தாண்டியது அதற்கு பின்னர் பேராசிரியர் ஜாவஹீருல்லா MLA அவர்கள் பேசி முடிக்கும் போது நடுநிசி கடந்து டிசம்பர் 07 வந்து விட்டது இரவு 12 30 மணியளவில் நன்றி உரையோடு முடிவுற்றது மணத்திற்கு நிறைவான கருத்தரங்கம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்திற்கு நன்றி