Skip to main content

மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு ஒத்திவைப்பு!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

makkal needhi maiam party State Conference Postponed!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் பொருண்மையிலான நமது கட்சியின் மாநில மாநாட்டினை பிப்ரவரி 21- ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அதற்கான அனுமதி கேட்டு கடந்த 6- ஆம் தேதியே காவல்துறையை அணுகினோம். 

 

இந்த அறிவிப்பினை எழுதும் நிமிடம் வரை வரை அனுமதி கிடைக்கவில்லை. கோவிட் பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடும் நிகழ்வினை மிகுந்த கவனமுடன் ஒருங்கிணைக்கப் போதிய கால அவகாசம் வேண்டும். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாட்டு நிகழ்வை மார்ச் 7- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். 

makkal needhi maiam party State Conference Postponed!

மாநாடுதான் ஒத்தி வைக்கப்படுகிறதே தவிர நமது கூடுகைகள் தொடர்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி, பிப்ரவரி 21- ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு துவக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் அமைந்துள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ரீ லியோ முத்து உள்ளரங்கத்தில் விமரிசையாக நடைபெறும். 

 

 

 

மார்ச் 7- ஆம் தேதி 'சீரமைப்போம் தமிழகத்தை' மக்கள் நீதி மய்யத்தின் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஒரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும். மார்ச் 8- ஆம் தேதி மகளிர் தினம் அன்று 'பெண் சக்தி' எனும் தலைப்பில் கட்டமைப்பு மற்றும் சார்பணிகளில் உள்ள அனைத்து மகளீரும் ஒன்று கூடி பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அரங்கில் நடைபெறும். இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்