

தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் வியூகங்களையும் செயல்பாடுகளையும் மக்களிடம் கொண்டு செல்ல சோசியல் மீடியாக்களையே அதிகம் பயன்படுத்துக்கின்றன. பிரதான கட்சிகள் துவங்கி சின்னச் சின்ன லெட்டர் பேடு கட்சிகள் வரை தொழில்நுட்ப டெக்னிக் மூலம் தங்களுக்கான லோகோவை உருவாக்கி அதனை ட்ரெண்டிங் ஆக்குகின்றன. இதற்காகவே, தொழில் நுட்பம் அறிந்தவர்களைக் கொண்டு ஒரு அணியையே உருவாக்கி வைத்துள்ளன அரசியல் கட்சிகள்.
அந்த வகையில் ரஜினியின் கருத்துகளை ட்ரெண்டிங் ஆக்கும் முயற்சியில் குதித்துள்ளது அவரது நலன் விரும்பும் ப்ராண்டிங் அமைப்பினர். சமீபத்தில் அரசியல் பேசிய ரஜினி, ’ அரசியல் மாற்றம் இப்போது இல்லைன்னா, எப்போதும் இல்லை ‘ என்கிற பஞ்ச் டயலாக்கை, ஆங்கிலத்திலும் ( ‘ Now or Never ‘ ), தமிழிலும் லோகாவாக உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் இந்த லோகோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!