கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பா.ம.க. கடலூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க கோவில் நிர்வாகம் சீர் செய்ய வேண்டும். தமிழக அரசும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கரும்பு அரவையை நிறுத்திவிட்டார்கள். தொடர்ந்து கரும்பு அரவை தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றுள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் அதே கூட்டணி தொடரும்.
உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க.வுக்கு தேவையான இடங்களை அ.தி.மு.கவிடம் கேட்டு பெறுவோம். நாங்கள் கேட்டு வாங்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மேலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பாடுபடுவோம். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.