முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தில் அவரது செயலாளர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ். எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான இவர், சமீபத்தில் எடப்பாடியால் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் தலையிட்டார்.

ஏற்கனவே நல்ல கலெக்ஷன் தரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை முக்கியமான பதவிகளில் இவர் நியமித்திருக்கிறார். அவர்களில் ஒருவர் நெடுஞ்சாலை துறை செயலாளராக இருக்கும் எஸ்.கே.பிரபாகர். இதுபோல முக்கியமான துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகளை விஜயகுமார் நியமித்துள்ளார் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சார்ந்தவர்கள்.
ஆட்சியின் கடைசி காலத்தில் பணம் நிறைய புரள வேண்டும் என டார்கெட் வைத்து பொதுப்பணித்துறைக்கு மணிவாசன் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக நலத்துறைக்கு மதுமதி என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் விஜயகுமார் எடப்பாடி பழனிசாமியிடம் நியமித்திருக்கிறார் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.