Skip to main content

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வாக்களிக்காமல் திரும்பி சென்ற பொதுமக்கள்...

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

மக்களவை தோ்தலில் 2-ம் கட்ட வாக்கு பதிவு தமிழகத்தில் 39 மற்றும் பாண்டிச்சோி 1 என 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில் கன்னியாகுமாி தொகுதியில் 31 பூத்துகளில் வாக்கு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்காளா்கள் 2 மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனா்.

 

kanyakumari field report

 

100 சதவீதம் வாக்குபதிவுக்காக தோ்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறை தடுக்க தவறி விட்டது என்றே கூறலாம். காலை 7 மணியில் இருந்தே புத்தன் சந்தை, செருப்பாலூா், தூத்தூா், சின்னத்துறை, லாயம், திக்குறிச்சி, ஆகிய பூத்துகளில் ஆா்வத்துடன் வாக்களிக்க வந்த மக்களுக்கள் ஏமாற்றம் அடைந்தனா். அங்கு வாக்கு பதிவு இயந்திரம் கோளாரால் அதை சாி செய்ய அதிகாாிகள் வருவாா்கள் என்று பூத் அதிகாாிகள் கைகட்டியப்படி உட்காா்ந்து இருந்தனா். 

வாக்களா்கள் நீண்ட வாிசையில்  கால் கடுக்க நின்று கொண்டு அவதி பட்டனா். இதனால் பல வாக்காளா்கள் வாக்களிக்காமல் சத்தம் போட்ட படியே  திரும்பி சென்றனா். அதே போல் 20-க்கு மேற்பட்ட பூத்களில் சுமாா் அரை மணி நேரம் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு இருந்தது. இது குறித்து காங்கிரஸ் மற்றும் திமுக -வினர் கூறுகையில், இந்த பூத்களில் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடிய வாக்காளா்கள் தான் அதிகம் இருப்பதால் அதை தடுக்கும் விதமாக அந்த வாக்காளா்கள் வாக்கு அளிக்காமல் திரும்பி செல்வதற்கான திட்டமிட்ட சதியை தான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தோ்தல் கமிஷன் செயல்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனா்.

 

 

சார்ந்த செய்திகள்