தேர்தல் களம், அடிக்கும் 103 டிகிரி சென்டிகிரேடையும் தாண்டுகிறது. வாக்கு கேட்டுவரும் தலைவர்களின் பிரச்சாரமோ. எரிமலை வெப்பத்தையும் மிகச் சாதாரணமாக்கியிருக்கிறது.
தலைவர்களின் அனல் பரப்புரையில், ஒரு சில உஷ்ணத்தை இந்தப் பகுதியில் வாசகர்களின் நேரம் காலம் கருதி சுள்ளென்று வெளிப்படுத்தியுள்ளோம். இதோ தெறிக்கவிடும் தலைவர்களின் அக்னி வரிகள்.
“பார்த்தாரா பர்த்தாரா” - கனிமொழி
இங்கே, கடும் வறட்சியும் வெள்ளமும் வந்தபோது வராத பிரதமர், தேர்தல் என்றால் மட்டும் வருகிறார். விவசாயிகள் எத்தனை நாட்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை ஒரு நிமிடமாவது பார்த்தாரா பிரதமர். வெளி நாட்டிலேயே இருக்கும் ஒரு பிரதமர் இந்த நாட்டிற்குத் தேவையைா எனக் கேட்டார் கனிமொழி.