Skip to main content

கமல் எதிர்கால அரசியலில் மாற்று சக்தியாக வருகிறாரா?

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

நேற்று வெளியான கருத்துக்கணிப்பு முடிவில் தமிழகத்தில் திமுகவும், மத்தியில் பாஜகவும் முன்னிலையில் இருப்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவித்தனர்.இந்த நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர் காலத்தில் அரசியலில் பெரும் மாற்றத்துக்கான சக்தியாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் அணைத்து கட்சிகளும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 
 

kamal



மேலும் தமிழகத்தில் அதிமுகவின் பெருவாரியான வாக்குகளை தினகரனின் அமமுக கட்சி பிரித்ததாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் சொல்கின்றனர்.இதனால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல்  சொல்லப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் பெருவாரியான நடுநிலை வாக்குகளை பிரித்ததாகவும் மற்றும் புது வாக்காளர்களின் வாக்குகளை பெற்றதாகவும் கூறப்படுகிறது. கமலுக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் வரவில்லை என்றாலும் அடுத்த வரவிருக்கும் தேர்தலில் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.இதன் மூலம் நடுநிலை வாக்குகளை கவரும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உருவெடுத்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்