Skip to main content

அதிமுகவுடன் இணைகிறதா அ.தி.க.? - திவாகரன் கட்சி செயலாளர் பேட்டி

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
join AIADMK?


அண்ணா திராவிடர் கழகம் என்ற பெயரில் சசிகலா தம்பி திவாகரன் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 17 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மதுரை, திருச்சி, மன்னார்குடியில் கட்சியின் கொள்கை விளக்க மாநாடு நடக்க உள்ளது. 
 

 

 

டிடிவி தினகரன் இரட்டை இலையை ஒழிக்க முயற்சிக்கிறார். இரட்டை இலைக்கு எதிராக அண்ணா திராவிடர் கழகம் செயல்படாது. அதிமுகவுடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார். 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஈபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் அடுத்தடுத்த திட்டங்கள்..ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு

Published on 10/10/2022 | Edited on 10/10/2022

 

EPS-led AIADMK's next plans

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக் கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், காமராஜ், தங்கமணி, பொன்னையன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

அதிமுக தற்போது இரு தரப்பாக இருக்கும் நிலையில் மொத்தம் இருக்கக்கூடிய 75 மாவட்ட செயலாளர்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள 69 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். 61 பழனிசாமி சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டினை முன்னிட்டு தமிழகம் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் 17ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

அதிமுகவின் துணை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த ஓபிஎஸ் மற்றும் துணை கொறடாவாக இருந்த மனோஜ் பாண்டியனையும் நீக்கி புதிய துணை சட்டப்பேரவை தலைவராக ஆர்.பி.உதயகுமாரையும் துணை கொறடாவாக  அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டப்பேரவைக்கு கடிதம் வழங்கி இருந்தது. இது குறித்து சபாநாயகர் முடிவு ஏதும் எடுக்காத நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. 

 

Next Story

“சசிகலாவைச் சுற்றியுள்ளவர்கள் நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்..” - திவாகரன்

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

Dhivakaran spoke about sasikala and admk

 

"சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது தான். இதற்கு காலம் பதில் சொல்லும். சசிகலா தலைமையில் தலைமையேற்க ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர்" என்று திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

 

அண்ணா திராவிடர் கழகத்தின் 5ஆம்  ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அவர், "வி.கே.சசிகலா சிறையிலிருந்து வந்து ஒரு வருடமாகியுள்ளது. கட்சியில் எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை இன்னும் பெரும்பாலான அதிமுகவினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.  


ஆறுமுகசாமி விசாரணை முடிவுற்றது. அறிக்கை வெளிவரவில்லை. இதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளோம். சிதறி கிடக்கும் அதிமுகவை சீரமைக்க முடிந்தால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். சசிகலா ஒரு பெண், அவரை சுற்றியுள்ளவர்கள் நல்ல செய்திகளை சொல்லி கொடுக்க வேண்டும். சசிகலா தலைமையில் தலைமையேற்க ஒரு சிலரை தவிர அதிமுகவின் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர். வி.கே.சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது.  இதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுகவில் சம்பாதித்தவர்கள் ஒரு போதும் அதிமுகவிற்கு துரோகம் செய்ய கூடாது. அதிமுகவிற்கு தற்போது சோதனையான நேரம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இயக்கத்தை அழிக்க கூடாது. அதிமுகவை  மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு உண்மையான அதிமுகவினர் ஒன்று சேரவேண்டும்" எனத் தெரிவித்தார்.