குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு நிலவி வருவதால் அது குறித்து மத்திய மந்திரிகள் அனைவரும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சரான அமித்ஷா உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லி லாஸ்ட் வர்த் நகரில் அமித்ஷாவே பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறார். அந்த ஏரியாவில் வங்க தேசத்தில் இருந்து வந்திருக்கும் இந்துக்களும் , சீக்கியர்களும் அதிகம். ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஒருவர் வீட்டில் அமித்ஷா பிரச்சாரம் செய்தபோது, மாடியிலிருந்து எதிர்ப்பு செய்துள்ளனர். அதில் அப்செட்டான அமித்ஷா, இந்த எதிர்ப்புக்குக் காரணம். அந்த வீட்டில் இருக்கும் நேரு பல்கலைக் கழக மாணவர் தான் என்று தெரிந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதன்பின் தான் ஒரு பெரிய கும்பல் கம்புக் கட்டைகளோட பல்கலைக் கழக வளாகத்துக்குள் ஆவேசமாக நுழைந்து இருப்பதாக கூறுகின்றனர். டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதல், இந்தியா முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது, அது சென்னை வரை எதிரொலிப்பதாக கூறிவருகின்றனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து 6ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய சென்னை பல்கலைக் கழக மாணவர்களை கனிமொழி எம்.பி. சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.