






Published on 09/06/2021 | Edited on 09/06/2021
சென்னை தி.நகர் மனமகிழ் மன்றத்தில், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஜெ. அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தீரர் ஜெ. அன்பழகன் ஃபவுண்டேசனைத் துவங்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் த. வேலு, நே. சிற்றரசு, தயாநிதி மாறன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.எல்.ஏ. ஜெ. கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஜெ. அன்பழகனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.