Skip to main content

‘நீதிபதி வந்தாதான் ஆச்சு; இல்லன்னா குதிச்சிடுவேன்’ - பிடிவாதம் பிடித்தவரிடம் நீதிபதி பேச்சுவார்த்தை

Published on 26/03/2023 | Edited on 26/03/2023

 

'It's only when the judge comes; I will never get off'; The judge negotiates with the obstinate

 

வேலூர், காகிதப் பட்டறை ஆற்காடு சாலையில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அரசினர் பாதுகாப்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 18 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், சேலம் செவ்வாய்பேட்டையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதான இளைஞர் ஒருவரை வேலூர் இல்லத்திலிருந்து சென்னை பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை இடம் மாற்றக் கூடாது என்று கூறியும் இங்கேயே வைத்திருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் ரகளையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பாதுகாப்பு இல்லத்தின் வளாகத்தில் உள்ள கட்டடத்தின் மீது ஏறி கீழே குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பாதுகாப்பு இல்லத்தில் வேலூர் வடக்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் தொடர்ந்து 3 1/2 மணி நேரமாக அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர் கீழே இறங்கவில்லை. 

 

சம்பவ இடத்துக்கு நீதிபதி வரவேண்டும் என அந்த இளைஞர் கோரிக்கை வைத்தார். நீதிபதிக்கு இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் இளஞ்சிறார் நீதித்துறை நீதி குழும நீதிபதி பத்மகுமாரி, அந்த இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை அடுத்து சுமார் 3 1/2 மணி நேரம் கழித்து அந்த இளைஞர் கீழே இறங்கி வந்தார். இதனையடுத்து நீதிபதி இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இளைஞரின் செயலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.