Skip to main content

''எங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது''-பாஜக அண்ணாமலை!

Published on 10/09/2021 | Edited on 10/09/2021

 

'' It gives us endless happiness '' - BJP Annamalai!

 

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

 

தற்பொழுது நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வருகிறார் ஆர்.என்.ரவி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. 1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற  ஆர்.என். ரவி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.பல்வேறு மத்திய அரசு பணிகளிலும், மாநில அரசு பணிகளிலும் பணியாற்றியவர். அதேபோல் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்பது பாஜகவிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், 'சீரிய முயற்சியால் நாகாலாந்து அமைதி நிலவச் செய்து உங்கள் சாதனை மகுடத்தில் மணிக்கல்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்