Skip to main content

நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை; சீமான் கேள்வி

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Income Tax Department raid conducted at actor Vijay's house; Seaman Question

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் அனைத்திலும் சரியாக இருக்கிறோம் என்றால் நாம் சோதனையை அனுமதிக்க வேண்டும். மறைக்க வேண்டிய அவசியம் இல்லையே.  சோதனை செய்யும்போது அதை தடுப்பது என்றால் அங்கு ஏதோ தவறு உள்ளது என தெரிகிறதே. வீட்டிற்குள் ஒன்றும் இல்லை என்றால் திறந்து காட்ட வேண்டியது தானே.

 

வருமான வரிச் சோதனை வருவதாக சொல்கிறார்கள். அங்கு என்ன சோதனை செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள். கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்பதை எந்த காலத்திலாவது வெளியிட்டதை பார்த்துள்ளீர்களா. அங்கு ஒரு பேரம் நடக்கிறது. அதிகாரிகளை நெஞ்சில் கை வைத்து சொல்ல சொல்லுங்கள். எனக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சோதித்துள்ளீர்கள். அனைவரும்  இதுதான் நடக்கிறது என்று என்னிடம் சொல்கிறார்கள். இதுதான் வருமான வரி சோதனையா.

 

நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை செய்தார்கள். இரண்டு நாள் சோதனை செய்துவிட்டு அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்துள்ளார் எனச் சொல்கிறார்கள்.  சோதனையின் போது அவர் காட்டிய ஆவணங்கள் அனைத்தும் உங்கள் அலுவலகத்திலும் இருக்குமே. பின் ஏன் சோதனைக்கு வந்தீர்கள். நாங்கள் சோதனை செய்தோம் எனக் கூறி சமூகத்தில் பொதுவெளியில் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தவே இத்தகைய செயல்கள். சரியாக உள்ளதா என தெரியாமல் ஏன் சோதனைக்கு வரவேண்டும். வீட்டில் வந்துதான் சரி பார்ப்பீர்களா. பின் ஏன் அலுவலகம் வைத்துள்ளீர்கள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பல வருடங்கள் கழித்து சந்திப்பு” - ரம்பா நெகிழ்ச்சி

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vijay rambha recent clicks

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் ரம்பா. 2010 ஆம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர், கனடாவில் உள்ள டொரண்டோ நகருக்கு குடி பெயர்ந்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறது. 

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் ரம்பா. ஆனால் சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது சமூக வலைத்தளப்பக்கங்களில் விஜய்யுடன் சந்தித்த புகைப்படங்களை தற்போது பகிர்ந்துள்ளார் ரம்பா. தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் விஜய்யை சந்திதிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து, “பல வருடங்கள் கழித்து உங்களை சந்தித்தது மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

vijay rambha recent clicks

விஜய் மற்றும் ரம்பா இருவரும் நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தச் சூழலில் விஜய்யுடன் ரம்பா எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Next Story

'பாமகவிற்குக் கடைசி தேர்தல்; சீமான் கீழ்பாக்கத்திற்குப் போகவேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
nn

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இடைத்தேர்தல் வெற்றி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

'பணம் கொடுத்து தான் திமுக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், 'திராவிட முன்னேற்றக் கழகம் பணம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை. பாமக தான் கிட்டத்தட்ட 500 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பாமகவை பொறுத்தவரை நான் இந்த தேர்தல் ஆரம்பிக்கும் போதே சொன்னேன். இதுதான் அவர்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் என்று. ஏனென்றால் அவர்கள் கூட சேர்ந்து இருப்பவர்கள் மிகவும் மோசமானவர்கள், வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். அது மட்டுமல்ல ராமதாசை பொறுத்தவரை நாங்கள் இனிமேல் மரம் வெட்ட மாட்டோம் என்று சொன்னால் தான் தமிழ்நாட்டில் டெபாசிட்டே வாங்க முடியும்'' என்றார்.

தொடர்ந்து சீமான் குறித்து கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றபோதே, 'சீமானுடைய கருத்துகள் எல்லாம் நான் கருத்தாகவே எடுத்துக் கொள்வதில்லை. அவரை பொறுத்தவரை ஒன்று குற்றாலத்திற்கு செல்ல வேண்டும். அல்லது கீழ்பாக்கத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு நாள் ஒன்று பேசுகின்றார் மறுநாள் இன்னொன்றை பேசுகின்றார். அவரைப் பொறுத்தவரை அவருக்கு மேலே கொஞ்சம் குழம்பி இருக்கிறது என்று நினைக்கின்றேன்.

அதிமுகவின் ஓட்டு திமுகவிற்கு சென்று உள்ளதா? என்ற கேள்விக்கு 'எல்லா தமிழர்களின் ஓட்டும் திமுகவிற்கு சென்று இருக்கிறது' என்றார்.