Skip to main content

'நான் அரைமணி நேரத்திற்கு முன் வந்திருந்தால் கண்ட்ரோல் செய்திருக்கலாம்'-அண்ணாமலை பேட்டி

Published on 14/08/2022 | Edited on 14/08/2022

 

'If I had come half an hour earlier, I could have done the control' - Annamalai interviewed

 

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நேற்று மதுரை விமான நிலையம் வந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இறுதி அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு பிறகு வெளியே வந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணி வீசியது பதற்றத்தை ஏற்படுத்தியது. அரசு  மரியாதை செய்த பிறகுதான் பாஜக மற்றும் பிறகட்சி தொண்டர்கள் மரியாதை செய்ய முடியும் என கூறியதால் இந்த மோதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''ஒரு ஆழமான தேசிய கலாச்சாரத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய கட்சி பாஜக கட்சி. அப்படி இருக்கும் பொழுது பாஜகவின் தொண்டர்களோ, பொதுமக்களோ இப்படி அமைச்சரின் மீது செய்திருந்தால்  நிச்சயமாக நமது தொண்டர்கள், தலைவர்களிடம் பேசி அதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகின்றோம். அதே நேரத்தில் ஒரு அமைச்சர், பொதுமக்கள், தொண்டர்கள் இங்கு நிற்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை என்று சொல்கிறார் என்றால் அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும்'' என கூறியிருந்தார்.

 

'If I had come half an hour earlier, I could have done the control' - Annamalai interviewed

 

இந்நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ''பாஜகவின் சித்தாந்தம் என்பது எந்த விதத்திலும் கலவரத்தை விரும்பக்கூடியது அல்ல. அதே நேரத்தில் புரோட்டோகாலில் இருக்கக்கூடிய மாவட்டத்தின் அமைச்சர் அங்கிருந்த பொதுமக்கள், தொண்டர்களிடம் பேசிய வார்த்தையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக 'தொண்டர்கள் செய்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?' என்று கேட்டால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று நடந்த சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாவட்ட தலைவர் நான் தாய் கழகத்திற்கு செல்கிறேன் என சொல்லி இருப்பது அவருடைய உரிமை. நீங்கள் இருங்கள் என்று நான் சொல்லப்போவது கிடையாது. அது அவரவர்களுடைய முடிவு. அடுத்த தலைவர் தயாராக இருப்பார். அவர் தோள் மீது சுமையை ஏற்றிக்கொண்டு கட்சியை வளர்க்க பாடுபடுவார். இது நேற்று நடந்திருக்கக் கூடாது. ஒரு அரை மணி நேரம் முன்னாடி நான் வந்திருந்தால் கூட இதை கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். நான் வந்த பொழுது சண்டை எல்லாம் முடிந்து ரொம்ப உஷ்ணமாக சூடாக இருந்தார்கள். நான் அங்கே வருவதை காவல்துறைக்கும் சொல்லவில்லை. காரணம் திருச்சியிலிருந்து சிவகங்கைக்கு வரவேண்டிய புரோகிராம் இருந்தது. அதன் பிறகு அங்கிருந்து மாற்றி மதுரைக்கு போக வேண்டிய நிலைமை இருந்தது. அதனால் காவல்துறைக்கும் கடைசி நேரத்தில் சொல்ல வேண்டியதாயிற்று. நேற்று நடைபெற்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அது கட்சியின் அடிப்படை சித்தாந்தத்திற்கு எதிரான நிகழ்வு'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.