சேலத்தில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து இ.பி.எஸ். தரப்பிடம் கூட்டணி அமைத்துள்ளன. வரப்போகிற் தேர்தலுடன் முடியப்போகிற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இடுப்பில் பாறாங்கல்லை கட்டிக்கொண்டு எல்லோரும் கிணற்றுக்குள் குதிப்பதுபோல கூட்டணி அமைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு பலரையும் அழைக்கிறார்கள். அந்த கூட்டணிதான் எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
தேமுதிக எங்களுடன் கூட்டணிக்கு பேசவில்லை. நாங்களும் அவர்களுடன் பேசவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரியும் என்றார்.
அமமுகவில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆட்களே இல்லை என்று அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ஆம் எங்கள் கட்சியில் ஆள் இல்லை. அதனால் அமைச்சர் உதயகுமாரையே நிற்க வைக்க அழைப்பு விடுக்கிறேன் என கிண்டலாக கூறினார்.