publive-image

Advertisment

நானும் கிறிஸ்துவன் எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை மண்ணடி பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சுமார் 2000 நபர்களுக்கு புத்தாடைகளும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டது. விழா மேடையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு ஆகியோர் கிறிஸ்துமஸ் விழாவிற்கான வாழ்த்துதெரிவித்துப் பேசினர்.

Advertisment

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “எல்லோரும் திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கின்றனர். ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கிறிஸ்துமஸ் விழாவிற்காக அல்லேலூயா எனக் கூறி வாழ்த்து தெரிவிக்கிறார். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. அவர் ரம்ஜானுக்கும் இதைவிட பெரிய நிகழ்ச்சி நடத்தி இருந்தார். இதுவே சமூகநீதி ஆட்சி.

நானும் கிறிஸ்துவன் எனச்சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் இஸ்லாமியன் என்றும் சொல்வேன்” எனக் கூறினார்.