அண்மையில், காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தவர் நடிகை குஷ்பூ. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு பாஜக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் போட்டியிட்ட நடிகை குஷ்பூ, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம்தோல்வியை தழுவினார்.
தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் தனது சமூகவலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக அரசியல் பேசி வருகிறார் குஷ்பூ. இந்நிலையில், தற்போது அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் அவரது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தது மட்டுமின்றி அவரது ட்விட்டர் கணக்கிலிருந்து அவரது ட்வீட்களை அழித்தும் உள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் குஷ்பூ புகார் கொடுத்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-6_7.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-3_14.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th_17.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-5_9.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-07/th-1_16.jpg)