தி.மு.க பொருளாளா் துரைமுருகன் வீடு மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் நடத்தும் கல்வி நிறுவனங்களில் வருமான வரி துறையினா் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தோ்தல் நேரத்தில் நடந்த இந்த சோதனை வேட்பாளருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vasanthakumar-h_35.jpg)
கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளா் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வசந்த் அன் கோ நிறுவனர் வசந்தகுமார் போட்டியிடுகிறார். இந்தநிலையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தின் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் சோதனை செய்தது போல் வசந்தகுமாரின் வசந்த் அன் கோ நிறுவன கடைகளிலும் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதால் அங்கும் வருமான வரித்துறையினா் சோதனை செய்ய வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
இதற்கு பதில் அளித்த வசந்தகுமார், எனது கடைகளில் பணப்புழக்கம் அதிகம் இருக்கிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்வது உண்மை தான். ஏனென்றால் எனக்கு கடைக்கு வரும் வாடிக்கையாளா்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பதில்லை. விலைக்கேற்ற பணத்தை வாங்கி கொண்டு தான் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதனால் பணப்புழக்கம் இருக்கும்.
அதே போல வருமான வரி சோதனைக்கு நான் பயப்பட மாட்டேன். 38 ஆண்டுகளாக வருமான வரியை கட்டி வருகிறேன். அதுவும் முறையாக தான் கட்டி வருகிறேன். எந்த அரசையும் என் நிறுவனம் இது நாள் வரையிலும் ஏமாற்ற வில்லை இதனால் மடியில் எனக்கு கனம் இல்லை என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)