Published on 12/10/2018 | Edited on 12/10/2018
![kamal haasan](http://image.nakkheeran.in/cdn/farfuture/nUuk5Z6wTQq5fwfTlW06Kb_MCfGlyv_Z4iR2VkytUvw/1539343732/sites/default/files/inline-images/Kamal%20Haasan.jpg)
தம் மீது தவறு இருக்கும் பட்சத்தில் உடனடியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி விலக வேண்டும் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல் வலியுறுத்தியுள்ளார்.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை என்று நிரூபணம் ஆகும் வரை ஆளுநர் அந்த பதவியில் இருக்கக்கூடாது. உடனடியாக அந்த பதவியில் இருந்து விலகுவதே ஒரு கண்ணியவாதிக்கு அழகும்கூட. கௌரவமான அரசியல்வாதியின் கடமை. இவையெல்லாம் இதற்கு முன்பு இருந்த பெரியவர்கள் செய்ததுதான். இவ்வாறு கூறினார்.