




Published on 23/10/2021 | Edited on 23/10/2021
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் நாதன் எழுதிய புத்தகத்தின் வெளியிட்டு விழா இன்று (23.10.2021) சென்னையில் நடைபெற்றது. நாதன் எழுதியுள்ள ‘மூன்று முகம்’ எனும் புத்தகத்தை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டார். அதனை தேவநாதன் யாதவ், தனபால், முன்னாள் நீதிபதி சுபாராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், ஏராளமான அக்கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர்.