'Get out of the traitor ...' - Slogan against the OPS!

Advertisment

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்தவானகரத்தில்உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி,ஓபிஎஸ்ஆகியோர்வானகரம்புறப்பட்ட நிலையில்ஓபிஎஸ்முன்னதாக வந்து சேர்ந்தார். அப்பொழுதுமண்டபத்தின் உள்ளே இருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஓபிஎஸ்வெளியேற வேண்டும் என முழக்கமிட்டனர். அதனால்அங்குபரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் மேடை ஏறினார். துரோகி வெளியே போஎன முழக்கம் எழுந்ததால் வைத்தியலிங்கம் உடனடியாக மேடையை விட்டு இறங்கினார்.

அப்பொழுதுமேடையிலிருந்தமுன்னாள் அமைச்சர் வளர்மதி தொண்டர்கள் அனைவரும் அமைதிகாக்க வேண்டும் எனகோரிக்கை வைத்ததோடு, 'ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை' எனஇபிஎஸ்ஸுக்குஆதரவாகபேசினார் வளர்மதி.