Skip to main content

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை! மு.தமிமுன் அன்சாரி வரவேற்பு!

Published on 05/07/2020 | Edited on 05/07/2020
M.Thamimun Ansari

 

 

ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம் என மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தான்குளம் இரட்டை கொலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்பை கலைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்தோம்.

 

காவல் துறையின் மாண்புகளை குலைப்பது, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது என காவல்துறைக்கும், தமிழக அரசுக்கும் களங்கத்தை ஏற்படுத்துவதாக பல ஜனநாயக சக்திகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்கள்.

 

சர்ச்சைக்குரிய  பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் அதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் வலுத்ததால் தமிழகம் முழுக்க இதற்கு எதிராக கண்டனங்கள் வலுத்தது. அதன் எதிரொலியாக இன்று தமிழகம் முழுக்க ப்ரண்ட்ஸ் ஆஃப் போலிஸ் அமைப்புக்கு தடை விதிப்பதாக தமிழக காவல் துறை அறிவித்திருக்கிறது. இதை  வரவேற்கிறோம். இதை நிரந்தர தடையாக நீடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 

மனித உரிமைகளை பாதுகாத்து சட்டத்தின் வழியில் அனைவரும்  கடமையாற்ற வேண்டும் என்பதே நமது விருப்பமாகும். இதற்கு ஏற்பளிக்கும் வகையில் தமிழக காவல் துறை அறிவிப்பு வெளியிட்டிருப்பது பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இப்படி இருந்தா எப்படி ஓட்டுக்கேட்க முடியும்?” - கவுன்சிலரை லெஃப்ட் ரைட் வாங்கிய எம்.எல்.ஏ

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
MLA advised the councillors to do the panchayat work properly

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்ட அடுத்த வெட்டுவானம் பகுதியில் எம்.எல்.ஏ நந்தகுமார் இன்று (18.7.2024) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைவருக்கும் குடிநீர் வழங்கும் அம்ரித் திட்டப் பணிகளில் தோண்டப்பட்ட குழிகளில் சரியான முறையில் ஒப்பந்ததாரர் சிமெண்ட் பேட்ச் ஒர்க் சரிவரச் செய்யாததால் பள்ளமாக இருந்தது.

உடனடியாக இதை அனைத்தையும் கொத்தி எடுத்து விட்டு மீண்டும் சிமெண்ட் சாலை தரமான முறையில் அமைக்க வேண்டும் எனவும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்குள் பணிகளை ஒழுங்காகச் செய்யவில்லை என்றால் மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது எனக் கவுன்சிலர்களைக் கடிந்து கொண்டார்.

தொடர்ந்து வெட்டுவானம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுமார் 43 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மேம்பாலம் அமைக்கும் பணியினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தரவேண்டும் என அதிகாரிகள் இடத்தில் அறிவுரை வழங்கினார்.

Next Story

அன்னியூர் சிவா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
Anniyur Siva sworn in as a member of the Legislative Assembly

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 13 ஆம் தேதி (13.07.2024) எண்ணப்பட்டன. இதனையடுத்து 20 சுற்றுகள் முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்து 24 ஆயிரத்து 53 வாக்குகள் பெற்று 67 ஆயிரத்து 757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுகவின் அன்னியூர் சிவா எம்.எல்.ஏ.வாக இன்று (16.07.2024)  பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக அன்னியூர் சிவா பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்கைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, சட்டமன்றப் பேரவைச் செயலாளர் கி. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.