Skip to main content

“நான் அறிந்த வரை அண்ணாமலை....” ட்விஸ்ட் வைத்த சீமான்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

“As far as I know Annamalai is an honest officer; But is BJP a corruption free party” Seeman

 

“அண்ணாமலை நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி ஊழலற்ற கட்சியா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது. இக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். 

 

நிகழ்வு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களைப் பொறுத்தவரை அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். நான் விசாரித்த வரை சரியாக வியாபாரம் நடக்காத கடைகளை மூடியதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் ஊழல் செய்யவில்லை என்பதை ஏற்கலாம். ஏனெனில் இதுவரை அவர்கள் ஆட்சியில் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆள்கிறார்கள். இந்தியாவையும் ஆள்கிறார்கள். அவர்கள் ஊழல் இல்லை என்று சொல்ல முடியாது. 

 

என்னைப் பொறுத்தவரை, நான் அறிந்த வரை அண்ணாமலை நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி ஊழலற்ற கட்சியா. ஒருவன் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழலற்று இருப்பது தான் சாதனை. திமுக அமைச்சர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம் வரவேற்றாலும் காலம் கடந்தது. காலம் கடந்து நீங்கள் ஒன்றை செய்யும் போது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தான் பார்க்க முடிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த குற்றம் அது. நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அந்த காலகட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா. கேட்டால் நீதிமன்றம் இப்போது தான் உத்தரவிட்டதாக சொல்கிறீர்கள். நான் நீதிமன்றத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். குற்றச்சாட்டு வராமல் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் உங்களுக்கு தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசியல் நெருக்கடி, பழிவாங்கல்” எனக் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

'பெண்கள் 10; ஆண்கள் 10' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
'females 10; males 10'-Preliminary list of candidates released by Naam Tamilar Katchi

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி 20 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து கூட்டணி இன்றி நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிட்டு வரும் நிலையில், 10 பெண்கள் மற்றும் 10 ஆண்களைக் கொண்ட முதற்கட்ட  வேட்பாளர் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 பெண்கள், 20 ஆண்கள் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இந்த முறையும் 20 பெண் வேட்பாளர்களுக்கு, 20 ஆண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தென்சென்னை, ஆரணி, கன்னியாகுமரி, கோவை, மயிலாடுதுறை, திண்டுக்கல், திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம், வேலூர், நீலகிரி, தென்காசி, திருவள்ளூர், பொள்ளாச்சி, நாகப்பட்டினம், அரக்கோணம், ஈரோடு உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.