தேனி பாராளுமன்றத் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடக்கக்கூடிய இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பார்வையிட்டார்.

Advertisment

evks elangovan

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்ளிடம் பேசிய அவர், மறுவாக்குப்பதிவு தேவையில்லாத ஒன்று. யார் மறுவாக்குப்பதிவு வேண்டும் என்று கேட்டார்கள். காங்கிரஸ், திமுக, கமல், தங்கதமிழ்ச்செல்வன் கேட்கவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்கவில்லை. யாருக்கு திடீரென்று ஞானோதயம் வந்து இதனை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

அரசாங்கத்தின் பணம்தான் வீணாகிறது. மக்கள் இப்போதாவது ஓட்டு போடுவார்கள் என்று நினைக்கிறார்கள். எத்தனை முறை மறுவாக்குப்பதிவு நடத்தினாலும் கண்டிப்பாக இந்த தொகுதியில் பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற முடியாது. வாக்குப்பதிவு மிக அமைதியாக நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

ஒன்று மோடி அணி. இன்னொன்று அதற்கு எதிரான அணி. இந்த இரண்டு அணிதான். இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, எல்லா எதிர்க்கட்சியினரும் ஒன்றாக சேர்ந்து ஏகமனதாக ராகுல்காந்தியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறினார்.