Skip to main content

ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்! அலெர்ட்டா இருக்கும் இபிஎஸ்! 

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

தமிழக முதல்வர் எடப்பாடியின் வெளிநாட்டு டூருக்கான நாள் நெருங்கிக்கிட்டு இருக்கு. ஆனாலும், அவர் கவனிக்கும் துறைகளை யாருக்கும் கொடுக்கிறதா இல்லை என்ற முடிவில் இருக்கும் எடப்பாடி. 28-ந் தேதி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளப் போறார் எடப்பாடி. அவர் தன்னிடம் இருக்கும் துறைகளைத் தங்களிடம் ஒப்படைச்சிட்டுப் போவார்ன்னு துணை முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் தங்கமணி, வேலுமணி ஆகிய அமைச்சர்கள் எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. முன்னே இருந்த முதல்வர்கள் அப்படி ஒப்படைச்சிருக்காங்க. 

 

epsதமிழக முதல்வரா இருந்த அறிஞர் அண்ணா, முதன்முதலா அமெரிக்காவுக்கு அரசியல் ரீதியா சுற்றுப்பயணம் மேற்கொண்டப்ப கலைஞர், நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் தன் இலாகாக்களை ஒப்படைச்சிட்டுப் போனார். அடுத்து சிகிச்சைக்காக அவர் இரண்டாம் முறையாக அமெரிக்கா போன போதும் பழைய மாதிரியே நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கலைஞரும் அரசுரீதியான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது நாவலர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் பொறுப்புகளைப் பகிர்ந்துக்கிட்டாரு. இதே போல் எம்.ஜி.ஆர். அரசு ரீதியா அமெரிக்கப் பயணம் போனப்ப, அமைச்சரவையில் அவருக்கடுத்து இருந்த நாஞ்சில் மனோகரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 


அப்புறம், நினைவிழந்த நிலை யில், அமெரிக்காவில் சிகிச் சைக்காக போனபோதும், இரண்டாவது முறை சிகிச் சைக்குப் போனபோதும் நாவலர் உள்ளிட்டவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது. அதேபோல் எடப் பாடியும் தன் துறைகளை ஒப்படைப்பார்ன்னு அவங்க எதிர்பார்த்தாங்க. ஆனா, தன் வசமுள்ள பொறுப்புகளை யாரிடமும் பகிர்ந்துக்கலைன்னு எடப்பாடி உறுதியா இருக்காரு. மேலிடத்துக்கும் இதை தெரிவிச் சிட்டாருனு அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கண்டித்து அதிமுக போராட்டம்! (படங்கள்)

Published on 23/07/2024 | Edited on 23/07/2024

 

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசால் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்திருந்தது. இதற்கு அதிமுக கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. 

இந்த நிலையில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளதைக் கண்டித்தும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியற்றைக் கண்டித்தும் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

The website encountered an unexpected error. Please try again later.