dmk

Advertisment

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்தமார்ச்1-ஆம் தேதி தனது பிறந்தநாளன்றுசென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகதலைவர் ஸ்டாலின்,''வரும் 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும்திமுகமாநாட்டில், தமிழகத்தின் 10 ஆண்டுகளுக்கான எனதுதொலைநோக்கு பார்வையை அறிவிக்கஉள்ளேன்'' எனக் கூறியிருந்தார். இந்நிலையில் மார்ச்11 ஆம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழக மக்களின்மனங்களைக் கவரும் வகையில்திமுகதேர்தல் அறிக்கை இருக்கும். விடியலுக்கான திட்டங்களுடன்தேர்தல் அறிக்கை இருக்கும்’ என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.