Skip to main content

கரோனா பாதிப்பு.... எடப்பாடி பழனிசாமிக்கு கருணாஸ் கோரிக்கை... 

Published on 25/03/2020 | Edited on 25/03/2020


                                                                                                                        

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்  இந்தியா முழுதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள்ளேயே இருக்க தமிழக அரசும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். தனித்திருப்போம் விழித்திருப்போம்! கொரோனாவைத் தடுத்திடுவோம் எனக் கூறியுள்ளார் திருவாடானை தொகுதி எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ்.

 

karunasமேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கல்விக் கூடங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட  அனைத்துமே மூடப்பட்டுள்ளன.  மக்களுக்காகத் தங்களைத் தாங்களே முடக்கிக்‌ கொண்டு நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தில் பாதிப்புகள் அதிகம்தான்! இதைத் தமிழக அரசு உணர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 1000/- நிதி உதவி வழங்கியுள்ளது வரவேற்க தக்கது.


திரைப்படத்துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் அதில் பணிபுரியும் அன்றாட தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை உணர்ந்து, திரைத்துறை சார்ந்தோரே நிதி உதவிகளைச் செய்கின்றனர் அதுவும் வரவேற்கத்தது.


அதேபோல், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆயிரக்கணக்கான நாடக நடிகர்கள், எந்தத் தொழில் நிலை இன்றி அன்றாட சோற்றுக்கே வழியின்றி உள்ளனர். இதைத் திரைத்துறை சார்ந்தோரும் உணரவேண்டும். நாடகக் கலைஞர்களுக்கு உதவு முன் வரவேண்டும்.


அதே போல் தமிழக அரசு அவர்களுக்குப் போதிய நிதி உதவி வழங்க வேண்டும். ஓர் இக்கட்டாண நிலையில் தவிக்கும் நமது மக்களைக் காப்பதைப் போல், நமது நாடக கலைஞர்களையும் காப்பாற்ற தமிழக அரசு முன் வரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு முற்றுப்புள்ளி?; உடைத்து பேசிய எடப்பாடி பழனிசாமி

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

edappadi Palaniswami  says End of ADMK-BJP alliance

 

தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். இல்லத் திருமண விழா இன்று (19-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

 

அப்போது அவர், “அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டது என்று தெளிவாக அறிவித்து விட்டோம். மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அதிமுகவின் இந்த முடிவை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, வேண்டுமென்றே திட்டமிட்டு பா.ஜ.க.வுடன் நாங்கள் மீண்டும் கூட்டணி வைப்போம் என்று பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது திட்டமிட்ட ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள். 

 

காங்கிரஸும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அந்த இரு கட்சிகள் தான். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மன்னராட்சி முறையைப் போல, திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும்” என்று கூறினார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“கால் வைக்கும் இடமெல்லாம் ஓபிஎஸ்க்கு கண்ணி வெடிதான்...” - ஜெயக்குமார் கிண்டல்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

"Everywhere we set foot is a minefield for OPS"- Jayakumar teased

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடையைத் தொடர்ந்து நேற்று ஓபிஎஸ்-இன் காரின் முகப்பில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “என்றாவது கடல் வற்றுமா? அண்ணாமலையை பொறுத்தவரை எப்பொழுதுமே ஒரு புரிதல் இல்லை என்று நினைக்கிறேன். கொக்கு காத்திருக்கும் ஆனால் கடல் எப்பொழுது வற்றி எப்ப கொக்கு கருவாடு சாப்பிடும். அதை முதலில் கேளுங்கள். கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல் வற்றி செத்ததாம். என்னைக்கும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிதான். நடக்காத விஷயத்தை பாஜக பேசி வருகிறது'' என்றார்.

 

தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு, ''வடிவேலு சொல்வார், ‘கால் வைத்த இடம் எல்லாம் கண்ணி வெடிதான்’ என்று, அது மாதிரிதான் ஓபிஎஸ்க்கு இன்று நடந்துகொண்டிருக்கிறது. சட்டத்தை யாரும் மீறவில்லை. 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் ஒருமித்த கருத்தை ஏற்றுக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சீராக சென்று கொண்டிருக்கிறது. உயர்நீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்துள்ளது; உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது; எலக்சன் கமிஷன் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இப்படி அங்கீகாரங்கள் எங்களுக்கு கிடைத்துள்ள போது வீணாகக் குழப்பம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் சென்று கொண்டிருக்கிறார். அவர் எங்கே போனாலும் நீதி, நேர்மை, நியாயம், சட்டம் எல்லாம் எங்கள் பக்கம் இருப்பதால் எல்லா வெற்றியையும் நாங்கள்தான் பெறுவோம்.'' என்றார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்