Skip to main content

எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது: ராமதாஸ் ட்வீட்

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
ramadoss

 

 

புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

 

இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும். மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருப்பது  வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது! 

 

மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை  தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்!” என குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்