publive-image

அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழை காரணமாகத்தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாகப் பல இடங்களில் மழைநீர் தேங்கியது.

Advertisment

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு இடங்களில்ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், ''மயிலாடுதுறை மாவட்டத்திலும் பன்னீர் செல்வத்திற்கு ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்.எடப்பாடி பழனிசாமிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார். இதுதான் அதிமுகவின் இன்றைய நிலைமை. எனவேதான் தலைமை இல்லாத கட்சியாக அதிமுக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

Advertisment

எப்படி அவரைஆட்சிப்பொறுப்பில் கொண்டு வந்த எங்களுக்குத்துரோகம் செய்தாரோ, அதேபோல் ஆட்சி போய்விடும் என்ற நிலைமையில் உதவி செய்த ஓபிஎஸ்-க்கு செய்தாரோ, அதுபோல பொதுச்செயலாளர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு மட்டும்தான்அது வேறு யாருக்கும் கிடையாது என்று சொல்லி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றபதவிகளை 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் பொதுக்குழுவைக் கூட்டி உருவாக்கிவிட்டுஇன்று ஜெயலலிதாவிற்கே துரோகம் செய்யும் வகையில் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என நினைக்கிறார்.

அவர் இடைக்கால பொதுச் செயலாளராகத்தன்னை அறிவித்துக் கொண்டார். பொதுக்குழு என்பது 2000 பேர் கலந்து கொள்வது. அவர்களை தன் வசப்படுத்துவது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல. எனவே இந்த 2000 பேர் மட்டும் கட்சியல்ல;தொண்டர்கள் எத்தனையோ லட்சக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நிர்வாகிகள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை எல்லாம் கூட வசப்படுத்தி விடலாம் ஆனால் தொண்டர்களையும், மக்களையும் வசப்படுத்த முடியாது.

Advertisment

துரோகத்தைத் தொடர்ந்து செய்கின்ற பழனிசாமி நான்காண்டுகள் அதைச் செய்தோம், இதைச் செய்தோம் என்று நடிக்கிறாரே நான்காண்டுகள் இவர்களது ஆட்சி தொடர்வதற்கும், ஓபிஎஸ்-க்கு ஆதரவு கொடுப்பதற்கும் காரணமாக இருந்தடெல்லிக்கும் அவர் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டார் என்பதுதான் உண்மை. அதனால்தான் டெல்லி அதைப் புரிந்து கொள்ளும் என்று நாங்கள் நினைக்கிறோம். எடப்பாடி பழனிசாமி என்ற துரோகத்தின் உருவம் வீழ்ந்தால்தான் அதிமுக கட்சிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது'' என்றார்.