Skip to main content

“தம்பி நோட்டீஸ புடிங்க.. ஓட்டு போடுங்க..” - வைரலாகும் துரை வைகோவின் பிரச்சாரம்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Durai Vaiko propaganda  Erode East byelection

 

“தம்பிக்கு எந்த ஊரு? நோட்டீஸ புடிங்க... மறக்காம கை சின்னத்துல ஓட்டு போட்ருங்க..” என மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளால் பரபரக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கை சின்னத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணிக் கட்சியினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஈரோடு சத்திரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே தனது பரப்புரையைத் தொடங்கினார். பேருந்து நிலையம், கருங்கல்பாளையம், பூங்கா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி உள்ளிட்ட மதிமுகவினர் பலரும் பெருந்திரளாக துரை வைகோவுடன் நடந்தே சென்றனர்.

 

துரை வைகோவை காண பொதுமக்களும் ஆர்வம் காட்டினர். டீக்கடை, ஹோட்டல், மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களுக்கு நடந்து சென்ற துரை வைகோ, அவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்படி டீக்கடை ஒன்றில் நுழைந்த துரை வைகோ, அங்கிருந்த ஊழியர்களிடம் சிறிது நேரம் பேசினார். “வியபாரம் எல்லாம் எப்படிப் போகுது? தேர்தல் வந்தாலே டீ நல்லா வியாபாரம் ஆகும்ல..” எனச் சிரித்துக் கொண்டே கேட்டார். பின்னர், அந்த டீக்கடை ஊழியரிடம், “உங்க சொந்த ஊர் எது?” எனக் கேட்டார். அதற்கு அந்த ஊழியர், “எனக்கு பீகார்” எனக் கூறினார். “உங்களுக்கு ஓட்டு இங்கே இருக்குதா?” என துரை வைகோ கேட்க, அவரும் சிரித்துக்கொண்டே “எனக்கு இங்கே ஓட்டு இருக்குது சார்” எனக் கூறினார். உடனடியாக, “இந்தாங்க நோட்டீச புடிங்க... உங்க ஓட்ட கை சின்னத்துக்கு போட்ருங்க..” எனக் கூறினார். அதற்கு அந்த பீகார் ஊழியர் தலையசைக்கவே.. அங்கிருந்து கிளம்பினார் துரை வைகோ. இது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியைச் சேர்ந்தவர் குவைத்தில் உயிரிழப்பு; துரை வைகோ எம்.பி உதவியால் சென்னை வந்த உடல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Duvakkudi Palanichami, who passed away in Kuwait, arrived in Chennai

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி துவாக்குடி நகராட்சி, பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த ரமீலா என்பவரது கணவர் பழனிசாமி(39). குவைத் நாட்டில் ஜூன் 5-ஆம் தேதி இரவு உயிரிழந்தார். மறைந்த பழனிசாமி அவர்களது மனைவி ரமீலா மறுமலர்ச்சி திமுக மகளிர் அணியில் பணியாற்றுகின்றார். ஆகவே, பழனிசாமி உடலை விரைந்து திருச்சி கொண்டு வரவேண்டும் என்பதற்காக துவாக்குடி நகரச்செயலாளர் மோகன் பெரியகருப்பன், மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மூலம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக தொலைபேசி வழியாக ரமீலாவிடம் தமது வருத்தத்தை பகிர்ந்து கொண்டார். இதன்பின்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமாருக்கும், சென்னையில் உள்ள குவைத் துணைத் தூதரகத்திற்கும் பேசிய பழனிச்சாமி  உடலை சொந்த ஊருக்கு அனுப்பிட முயற்சி மேற்கொண்டார். இதனிடையே அயலகத்தில் உள்ள மதிமுக இணையதளத்தைச் சேர்ந்த மினர்வா ராஜேஷ், பிரசாத் அவர்களையும் தொடர்பு கொண்டு, பழனிசாமி அவர்கள் பணியாற்றிய உணவு விநியோகிக்கும் நிறுவனத்தில் இருந்து போதிய சான்றிதழ்கள் பெற்றுத்தர உதவிட வலியுறுத்தினார்.

குவைத் நாட்டில் இதுபோன்ற சமூக நல உதவிகளை தாமாக முன்வந்து செய்திடும் சமூக ஆர்வலர் மதி மற்றும் பொறியாளர் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பையும் அறிந்து, இருவரையும் எம்.பி. துரை வைகோ தொலைபேசி வழியாகப் பாராட்டினார். இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பழனிசாமி உடலை போதிய ஆவணங்களைப் பெற்றுத் தந்து, ஆம்புலன்ஸ் மூலம் துவாக்குடிக்கு கொண்டு செல்வதற்கு உதவிடுமாறு, விமான நிலைய அலுவலர்களில் ஒருவரான கஜேந்திரனை எம்.பி. துரை வைகோ கேட்டுக் கொண்டார்.

மேலும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களுடன், ரமீலா குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து பழனிசாமி உடலைப் பெற்றுக் கொள்ள பணித்தார். இதனைத் தொடர்ந்து அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு பழனிசாமி உடல், அவரது மகன் பிரவீன், அண்ணன் மகன்கள் செல்வகுமார், மணி, மைத்துனர் வினோத்குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விமான நிலையத்தில் மறைந்த பழனிசாமி உடலுக்கு மறுமலர்ச்சி திமுக  செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் மாவை.மகேந்திரன், தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான சைதை சுப்ரமணி, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், துவாக்குடி நகரச் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான மோகன் பெரியகருப்பன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்ந்து தென்சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹரி, மாநிலப் பொறியாளர் அணிச் செயலாளர் ஹேமநாதன், பல்லாவரம் வடக்கு பகுதிச் செயலாளர் வீராக்குமார், பல்லாவரம் தெற்கு பகுதிச் செயலாளர் எஸ்.மார்ட்டின், பம்மல் தெற்கு பகுதிச் செயலாளர் பிரவீன், பம்மல் வடக்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், சேகர், கே.எஸ்.பிரசாத் ஆகியோர் அவரது உடலுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

ஜூன் 5-ஆம் தேதி மறைந்த பழனிசாமி உடல், திருச்சி எம்.பி. துரை வைகோவின் பெரும் முயற்சியால்தான் 8-ஆம் தேதி மதியம் சென்னைக்குக் கொண்டுவர முடிந்தது. இதைக் கண்டு பழனிசாமி குடும்பத்தினர்  கண்ணீர் மல்க நெகிழ்ந்தனர். இன்று இரவு துவாக்குடிக்கு வருகை தரும் திருச்சி எம்.பி. துரை வைகோ, மறைந்த  பழனிசாமி  குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவிக்க உள்ளார்.

Next Story

'சீமானை பாராட்டத்தான் வேண்டும்'-துரை வைகோ பேட்டி

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
'Seeman should be appreciated' - Durai Vaiko interview

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு போட்டியிட்ட துரை வைகோ வெற்றி பெற்ற நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு இந்த எளியவன் துரை வைகோ பாடுபடுவேன் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை திருச்சி மட்டுமல்ல புதுவையும் உட்பட்ட 40 தொகுதிகளிலும் 100 விழுக்காடு வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளோம்.

பாஜக அணி 18 விழுக்காடு வாக்குகள் வாங்கி இருக்கிறார்கள். பாஜக தனியாக நின்றிருந்தால் மூன்று விழுக்காடு வாக்குகள் தான் வாங்கி இருப்பார்கள். பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. அந்த கூட்டணி கட்சிகளின் வாக்கு எல்லாம் சேர்ந்து தான் 18 சதவிகிதம். தனியாக பாஜக நின்றிருந்தால் போன முறை வாங்கிய மூன்று சதவீதத்தை தாண்டி இருக்க முடியாது. எனவே பாஜகவினர் அவர்களே அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அரசியல் சித்தாந்தங்களில் வேறுபடலாம். ஆனால் சகோதரர் சீமானை பொறுத்த வரைக்கும் வேறுபட்ட கொள்கைகள் இருந்தாலும் தனியாக நின்று இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதை நாம் பாராட்ட செய்யதான் வேண்டும்'' என்றார்.