Skip to main content

‘குஷ்பு ஒழிக..’ - தி.மு.க.வினர் ஆக்ரோஷம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
DMK Women wing Condemn kushboo

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப்போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்தவகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.க. மகளிரணியினர் குஷ்பு போட்டோக்களை எரித்துவிட்டு, ‘தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாயைக் கேவலப்படுத்திப் பேசிய குஷ்பு ஒழிக!’ என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.   

சார்ந்த செய்திகள்