Skip to main content

”ஐந்து வருடங்கள் மட்டுமல்ல இன்னும் ஐம்பது வருடங்கள் திமுக தான்.....” - அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

"DMK will be in power for five or fifty years" - Minister Anbil Mahesh

 

“திமுக இன்னும் ஐந்து வருடம் மட்டும் அல்ல 50 வருடம் ஆட்சியில் இருக்கும்” என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காட்டூரில் நடந்த கலைஞரின் 99வது பிறந்தநாள் கூட்டத்தில் பேசினார். 

 

திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் 99வது பிறந்த நாளை திமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திமுக சார்பில் தொகுதி வாரியாக பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதி திமுக சார்பில் நடந்த கலைஞரின் 99வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளரும் 42 வது வார்டு கவுன்சிலருமான நீலமேகம் தலைமை வகித்தார். அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “கலைஞர் எந்த ஒரு திட்டத்தை தொடங்குவது என்றாலும் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில்தான் தொடங்குவார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் காட்டூர் பாப்பா குறிச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சத்துணவு திட்டத்தை தொடங்கினார். தற்பொழுது திருவெறும்பூர் தொகுதிக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க் கட்சியாக இருந்தபோது போராடி செய்தோம் தற்பொழுது ஆளுங்கட்சியாக இருப்பதால் மக்களின் தேவையான அனைத்தையும் செய்வோம். 

 

திருவெறும்பூர் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தும், இன்னும் செய்வோம் செய்து காட்டுவோம் என்ற உத்வேகம் என்னிடத்தில் உள்ளது. சிலர் நம்மை விமர்சனம் செய்வதை காதில் வாங்கி கொள்ள வேண்டாம்  வாக்களித்த நீங்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். 

 

திமுக கட்சி கிடையாது; மக்களுக்கான இயக்கம். அதனால் மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ஆட்சியில் இருந்தபோதும் இல்லாவிட்டாலும் செய்வோம். தேர்தலின்போது 505 வாக்குறுதிகள் கொடுத்தோம். அதில் 250க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்று உள்ளோம். திமுக இன்னும் 5 வருடம் ஆட்சியில் இருக்கும் என கூறுவதை விட்டுவிடுங்கள். இன்னும் 50 வருடம் திமுக தான் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.