தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை கால அவகாசம் இன்று (04.04.2021) மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை, ஆர்.கே நகர் தொகுதி திமுக வேட்பாளர் எபினேசரை ஆதரித்து ஏஜ்.6 காவல் நிலையம் அருகில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அதன்பின் மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் டி.சுதர்சனத்தை மாதவரம் மண்டல அலுவலகம் அருகில் பிரச்சாரம் செய்தார்.
ஆர்.கே நகர், மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் (படங்கள்)
Advertisment