Skip to main content

கவுரவப் பிரச்சனையில் சேர்மன் பதவியை தொலைக்கப் போறாங்களே... திமுகவுக்கு கிடைத்த வாய்ப்பு!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

கூட்டணி பிளவால், குமரி மேற்கு மாவட்டத்தில் பின்னடைவைச் சந்தித்த தி.மு.க.வுக்கு, சேர்மன் பதவிக்குப் போட்டியிடும் வாய்ப்பைத் தந்தி ருக்கிறது திருவட்டார் ஒன்றியம். மொத்தமுள்ள 12 வார்டுகளில் தி.மு.க. 5, அ.தி.மு.க. 3, காங்கிரஸ் 2, பா.ஜ.க., கம்யூனிஸ்ட் தலா ஒரு இடத்தைப் பிடித்தன.
 

dmk



கம்யூனிஸ்டின் தயவுடன் சேர்மன் பதவிக்கு மோதலாம் என்று தி.மு.க. எண்ணியிருக்கிறது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்து குலுக்கலில் கொண்டுவிடும் திட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ். இதை முறியடிக்க, சேர்மன் கோதாவில் இருக்கும் தி.மு.க.வின் பிரேமசுதாவும், ஜெகநாதனும் காங்கிரஸ் மாவட்டத் தலைவரான ராஜேஸ்குமாரிடம் முறையிட்டனர். அவர், "உங்க மா.செ. மனோதங்கராஜை எங்கிட்ட நேரில் வந்து பேசச்சொல்லுங்க'' என்று அனுப்பிவிட்டார்.

மனோ தங்கராஜோ, "என்னால வலிய போயெல் லாம் பேசமுடியாது. காங்கிரஸ் அ.தி.மு.க.வை ஆதரிச்சு, அதனால குலுக் கல் வரும்னா அதையும் பார்த்துக்கலாம்'' என கூறிவிட்டார். தி.மு.க. கவுன் சிலர்களோ, "கிடைக்கிற ஒரேயொரு சேர்மன் பதவியையும் கவுரவப் பிரச்சனையில் தொலைக்கப் போறாங்களே' என்று புலம்புகிறார்கள்.


இதற்கிடையில் காங் கிரஸ், பா.ஜ.க. உறுப்பினர் களிடம் பிரேமசுதாவே நேரடியாக பேரத்தில் இறங்கிவிட்டார். சேர்மன் பதவிக்காக செலவு பண்ண மாட்டேனா? எனக் கிளம்பியிருக்கும் ஜெகநாதன், மா.செ. மனோதங்கராஜின் ஜென்ம பகையாளியான கிழக்கு மா.செ. சுரேஷ்ராஜனிடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இன்னொருபுறம், தி.மு.க.வை வரவிடக் கூடாது என்ற நோக்கத்தில், பா.ஜ.க. கூட்டணி யோடு, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டையும் இணைத்து, காங் கிரஸுக்கு வைஸ் சேர்மன் பதவியுடன், கைநிறைய கொடுக்கவும் பேசிவருகிறார் அ.தி.மு.க. ஜான் தங்கம்.

10 வார்டுகள் இருக்கும் தக்கலை ஒன்றியத்தில், 5 உறுப்பினர்களுடன் மெஜாரிட்டியாக இருப்பதால் சேர்மன் பதவியைத் தக்கவைக்க நினைக்கிறது பா.ஜ.க. 4 உறுப்பினர்களைக் கொண்டி ருக்கும் காங்கிரஸ், தி.மு.க.வின் ஒரே கவுன்சிலரான மவுண்ட் தேன்ரோஜா மனசுவைத்தால், குலுக்கலுக்கு கொண்டு போகலாம். லக் அடித்தால் தலைவராகலாம் என்று அடிப் போடுகிறது.


கூட்டணிப் பூசலில், பா.ஜ.க.வுக்கு பச்சைக்கொடி காட்ட தி.மு.க. மா.செ. மனோ தங்கராஜ் முடிவு செய்திருக்கிறார். பொன்னாரும் மவுண்ட் தேன்ரோஜாவுக்கு வைஸ் சேர்மன் பதவி தருவதாக பேசியிருக்கிறார். காங்கிரஸின் கிறிஸ்டி ஜெகதாவோ, "குலுக்கலில் லக் அடித்தால் நான் சேர்மன், நீங்க வைஸ் சேர்மன். அதுபோக கைநிறைய தர்றேன்' என்று தேன்ரோஜாவிடம் உத்தரவாதம் தந்திருக்கிறார்.


 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.