Skip to main content

களத்தில் இறங்கிய திமுக! துரைமுருகனின் வேலூர் தேர்தல் ப்ளான்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நடைபெற்ற 38 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக சார்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். 
 

dmk



தேர்தல் அறிவித்த உடனே தேர்தல் பொறுப்பாளர்களை திமுக அறிவித்து தேர்தல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர்.  வேலூர் தேர்தலுக்கு பொறுப்பாளர்களாக திமுக சார்பில் வேலூர் மாவட்டச் செயலாளர்களான ஆர்.காந்தி, நந்தகுமார், முத்தமிழ்ச்செல்வி ஆகியோர் மற்றும் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன் உட்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராணிப்பேட்டை ஆர். காந்தி, மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி. நந்தகுமார்  மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் சிறுபான்மையினர் வாக்குகளை கவர சிறுபான்மையின தலைவர்களை சந்தித்ததாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திமுக நிர்வாகிகளை அழைத்து களத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்