
சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் டிச. 8 ஆம் தேதி கலைஞர் மாளிகையில் நடக்கிறது.
இது தொடர்பாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மத்திய மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் டிசம்பர் 8ம் தேதி, காலை 10 மணிக்கு நடக்கிறது. புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் இக்கூட்டம் நடக்கிறது.
மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகிக்கிறார். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, சேலம் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி, பேரூர், ஒன்றிய, மாநகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள்; இந்நாள் எம்எல்ஏ; எம்பிக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” குறிப்பிடப்பட்டுள்ளது.