Skip to main content

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்ட தேதி அறிவிப்பு

 

DMK district secretaries meeting date notification

 

திமுகவின் உட்கட்சித் தேர்தல் 90% முடிவடைந்த நிலையில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி தேர்தல் நடந்தது.

 

திமுகவின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். திமுக மகளிர் அணிச் செயலாளராக இருந்த தூத்துக்குடி எம்.பி. கனிமொழி திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

இதனைத் தொடர்ந்து தற்போது திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில், டிசம்பர் 1-இல் திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிசம்பர் 1-இல் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி உறுப்பினர்கள், மகளிர், இளைஞரணி, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.