Skip to main content

திவாகரன் கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் எத்தனை தெரியுமா? அதிமுகவினர் ஷாக்!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

அ.ம.மு.க.வெல்லாம் ஒரு கட்சியா' என மேடைகளிலும் விவாதங்களிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. புள்ளிகள் பேசினாலும், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு அ.ம.மு.க.வும் முக்கிய காரணம் என்பதை நெருக்கமாக பேசும்போது ஒத்துக்கொள்கின்றனர். "பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. களம் கண்டது, அ.தி.மு.க. தோற்றது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை. அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. இப்ப உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. நின்றதும் அ.தி.மு.க. பாதிக்கப்பட்டிருக்கு'' என்கிறார்கள்.
 

admk



உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க.விற்கு பொதுவான சின்னம் இல்லை என வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள்தான் சொன்னார்கள். அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யக்கூட எங்களுக்கு நேரம் தரவில்லை. கட்சி சார்பாக போட்டியிடும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கு சின்னங்களில்தான் போட்டியிட்டோம்'' என்கிறார் அ.ம.மு.க.வின் வழக்கறிஞரான ராஜா செந்தூர்பாண்டியன்.


மொத்தம் 5040 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 4710 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தோம். அதில் 94 பதவிகளில் நாங்கள் வெற்றிபெற்றோம். கடலூரில் ஐந்து பேர், திருவண்ணாமலையில் 6 பேர், தேனியில் 5, புதுக்கோட்டையில் 5, மதுரையில் 7, சிவகங்கையில் 8, தஞ்சாவூரில் 10, தூத்துக்குடியில் 14 என தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இது தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் 16 முதல் 19 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம்'' என்கிறார் அ.ம.மு.க. தலைவர்களில் ஒருவரான வெற்றிவேல்.

திவாகரனின் அ.தி.க.வும் உள்ளாட்சித் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அ.ம.மு.க.வினரை வளைக்க அ.தி.மு.க. வலைவீசி வருகிறது.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அப்போதே சீப் ஏஜென்ட் ஓபிஎஸ்தான்' - எடப்பாடி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
'That's when the cheap agent became an ops' - Interesting information shared by Edappadi

'ஓபிஎஸ் எந்தக் காலத்திலும் அதிமுகவிற்கு விசுவாசமாக இருந்ததில்லை' என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''78.67 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால் அதில் 24.50 கோடி தொகை மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கி இருக்கிறார்கள். இது இரண்டையும் சேர்த்துதான் 78.67 கோடி ரூபாய். அதை வைத்து பார்த்தால் குறுவை தொகுப்புக்கு 54.17 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது. ஏனென்றால் குறுவை சாகுபடிக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை''என்றார்.

அதனைத் தொடர்ந்து 'சசிகலா மீண்டும் அரசியலில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பதாகக் கூறியுள்ளார். அதிமுகவை காப்பாற்றப் போகிறேன் என்று சொல்கிறாரே' என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ''இத்தனை நாள் அதிமுகவை யார் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இப்பதான் காப்பாற்ற வந்திருக்கிறார்களா? இது என்ன வேலையா ரீஎன்ட்ரி கொடுக்க. ஒரு வேலைக்கு சென்று விட்டு மூன்று வருஷம் நின்று விட்டு மறுபடியும் வேலைக்கு சேர்வதா ரீஎன்ட்ரி. 2021-இல் என்ன சொன்னார்கள் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகி விட்டேன் என்று சொன்னார்கள். இப்பொழுது ரீ என்ட்ரி  என்கிறார்கள். இத்தனை நாட்கள் கட்சியைக் காப்பாற்றியது யாரு? தொண்டன்'' என்றார்.

இறுதியாக செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு எழ முயன்றபோது எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள், 'ஓபிஎஸ்-ஐ மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ''அவரை எப்படி அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியும். அவர்தான் அதிமுகவுக்கு எதிராக, இரட்டை இலைக்கு எதிராக போய் போட்டியிட்டுள்ளார். ஒரு தொண்டன் கூட அவரை மதிக்க மாட்டான். ஒவ்வொரு தொண்டனும் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைத்து அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் எனச் செயல்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில் அவர் போய் பலாப்பழத்தை வைத்து பூஜை செய்கிறார். ஏற்கெனவே ஒருமுறை இதே தவறை செய்தார். அதிமுக ஆட்சியில் நான் முதலமைச்சராக இருந்தபோது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்து வாக்கெடுப்பு நடந்த பொழுது, எதிர்த்து ஓட்டு போட்டார்.

ஓபிஎஸ் கட்சிக்கு விசுவாசமாக எப்பொழுதுமே இருந்ததில்லை. சுயநலமாகத்தான் செயல்படுவார். 1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா தன்னந்தனியாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது நானும் நின்றேன். அப்பொழுது வெண்ணிற ஆடை நிர்மலா, ஜானகி அணி சார்பாக போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு சீப் ஏஜென்டாக இருந்தவர் இதே ஓபிஎஸ். அப்பொழுதே ஜெயலலிதாவிற்கு எதிராக இருந்தவர் ஓபிஎஸ். எப்பொழுதும் அவர் ஜெயலலிதாவுக்கும், அதிமுகவுக்கும் விசுவாசமாக இருந்ததில்லை. சுயநலம்தான் அவரிடம் உண்டு. இப்பொழுது கூட சுயநலத்தில்தானே அங்கே போய் போட்டியிட்டார். ஜெயிச்சா மத்திய மந்திரி ஆகலாம் என்று, ஆனால் நாட்டு மக்கள் சரியான தண்டனையைக் கொடுத்துள்ளார்கள். பலாப்பழத்தை வைத்து பூஜை போடுபவரை எப்படி தொண்டன் ஏற்றுக் கொள்வான். இந்தக் கட்சிக்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைதான் வரும்'' என்றார்.

Next Story

நில மோசடி புகார்; விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Vijayabaskar bail plea adjourned again

கரூரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட 100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு, கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், 2-வது முறையாக இருதரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் கரூர் நகர போலீசில் கொடுத்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த 22 ஏக்கர் நிலம் சுமார் ரூ.100 கோடி மதிப்புடையது. இந்தப் புகாரின் மீது கரூர் நகர போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர். 

Vijayabaskar bail plea adjourned again

இதேபோல், கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த 15ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் வருகின்ற 21ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை மீண்டும் 2வது முறையாக ஒத்தி வைத்துள்ளார்.