Skip to main content

அதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம்?

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

நாளைய தினம் தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சியினரும்,பொது மக்களும் மிகுந்த ஆர்வமுடன் எதிர் பார்த்து காத்துக்கொண்டிருகின்றனர்.அதிமுகவில் தேர்தலுக்கு முன்பே உட்கட்சி பூசல் தொடங்கிய நிலையில், அதிருப்தியில் இருக்கும் அமைச்சர்கள். எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் நாளைய தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்களாம். மேலும் எடப்பாடி பழனிச்சாமி,பன்னீர்செல்வம் மீது அதிருப்தியில் ஒரு சில முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவும் முடிவில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. 

 

admk



அதிமுக படுதோல்வி அடைந்தால் அக்கட்சியில் பெரிய பூகம்பமே வரும் என்கின்றனர். அதிமுகவிற்கு மேற்கு மண்டலத்தில் செல்வாக்கு அதிகமாக இருக்கும். ஆனால் அதே மேற்கு மண்டலம் என்று சொல்லக்கூடிய  கொங்கு மண்டலத்தில் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது உட்கட்சி கோஷ்டி பூசல். அமைச்சர் கருப்பண்ணனுக்கும் தோப்பு வெங்கடாசலத்துக்கும் இடையேயான மோதலால் தோப்பு கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் செய்தியாளர்களை சந்தித்து கட்சியில் நடக்கும் உட்கட்சி பூசலை வெளிப்படுத்தினார். மேலும் முதல்வர் எடப்பாடியின் முடிவுகளால் அதிருப்தியில் இருப்பவர்களின் கோரிக்கைகளை ஏற்று சமாதானம் செய்யும் முயற்சியிலும் எடப்பாடி இறங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் மீண்டும் ஒரு தர்மயுத்தம் நடக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்