தேர்தல் சமயங்களில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் கலைகட்டும். ஆனால் சிலர் அங்குசென்று சில விஷயங்களை உளறுவார்கள். அப்படி உளறுபவர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன்.

Advertisment

dindigul-seenivasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இவர் இதற்கு முன்பு உளறியவை என தனி கட்டுரை தொகுப்பே வெளியிடலாம் அந்தளவிற்கு அவர் உளறுவார். அண்மையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்த இவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம் ஆகியவை கொடுத்தார் என்பதற்கு பதிலாக, பச்சரிசி, மாம்பழம், பனைவெல்லம், கரும்புகள் கொடுத்து 100 ரூபாய் கொடுத்தார் என உளறினார்.

இதனால் கூட்டத்தில் சிரிப்பலையும், சலசலப்பும் ஏற்பட்டது. முன்னொரு தடவை மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என கூறுவதற்கு பதிலாக ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment