Dindigul district ops supporters struggle

அதிமுக பொதுக்குழு இன்று கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், இ.பி.எஸ்-ஐ ஒற்றைத்தலைமையாககொண்டுவரபொதுக்குழு உறுப்பினர்கள் விரும்புவதாக அறிவித்தார். இதனைக் கண்டித்து ஓ.பி.எஸ்உட்பட அவரது ஆதரவாளர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்ஓபிஎஸ்-க்குஆதரவாக அதிமுக கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

மைக்கேல் பாளையத்தில் உள்ள அதிமுக கிளை நிர்வாகி சகாயம் தலைமையில்சகாயராஜ்,மரியமைக்கேல்,அன்புரோஸ்,லாரன்ஸ்உள்ளிட்ட அதிமுகவினர் மைக்கேல் பாளையம் - திண்டுக்கல் சாலையில் ஊர்வலமாக வந்தனர். பின் அங்கிருந்த அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டனர். மேலும்,ஓபிஎஸ்-க்குஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

Dindigul district ops supporters struggle

பின்னர் சாலையில் தரையில் அமர்ந்து,பொதுக்குழுகூட்டத்தில்ஓபிஎஸ்தாக்கப்பட்டதாககூறி, அவரை அவமரியாதைசெய்ததைக்கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்அங்குபரபரப்பு நிலவியது.

நிலக்கோட்டை தொகுதி அதிமுகஎம்.எல்.ஏதேன்மொழி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு நிலையை எடுத்து இருக்கும் வேளையில்,கிளைக்கழக நிர்வாகிகள்ஓபிஎஸ்-க்குஆதரவாக அதிமுக கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்ட சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.