
திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.