Skip to main content

அமுல் மூலம் ஆவினை அழிப்பதற்கு அமித்ஷா சதி - காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

 destroy Avin by Amul Accusation- Congress MP

 

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் விருதுநகர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  

 

“விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் உள்ள குடிநீர்ப் பிரச்சனை குறித்து ஆய்வு செய்வதற்கு அமைச்சர்கள் தலைமையில் சிறப்புக் கூட்டம் நடத்திட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். மோடி வெளிநாடு பயணம் குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் பயணத்தை பற்றி கூறவில்லை. பொத்தாம் பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்வதால் மாநிலங்களுக்கு நன்மை கிடைக்காது எனப் பேசியிருக்கிறார். அவர் பிரதமர் மோடியைக் குற்றம் சொல்கிறார் என்றே நினைக்கிறேன்.

 

9 ஆண்டுகளாக பிரதமர் மோடி  சுற்றாத ஊரே இல்லை. போகாத நாடே இல்லை. அவர் பேசாத பேச்சும் இல்லை. மோடி வெளிநாடுகளுக்குச் சென்று என்ன பெற்று வந்தார் என்று ஆர்.என்.ரவி கேட்கிறாரோ என்ற ஐயம் எழுகிறது. ஆளுநர் பணியை விட பாஜக மாநிலத் தலைவர் செய்யும் பணியைப் போல் சர்ச்சைக்குரிய விசயத்தைத் தொடர்ந்து பேசுகிறார். ஆளுநர் மாளிகையை காலி செய்து விட்டு விரைவில் கமலாலயத்தை அவருடயை அலுவலகமாக மாற்றிவிடுவார் போல் தெரிகிறது. இதுபோன்ற ஆளுநரை தமிழகம் இதுவரை சந்தித்ததில்லை.

 

ஆவினை மேம்படுத்துவதற்கு புதிய அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட மனோ தங்கராஜ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஆவினில் சீர்கேடு நிலவி வருவதற்கு அதிமுக அரசே காரணமாகும். குஜராத் மாநிலத்தின் அமுல் மூலம் ஆவினை காலி செய்வதற்கும் உண்மையான வேர்களை அறுப்பதற்கும் பாஜக அமைச்சர் அமித்ஷா மூலம் சதித்திட்டம் நடக்கிறது. ஆவின் பிரச்சனைகளின் பின்னணியில் பாஜகவினருக்கு பங்கு உள்ளது.

 

அதிமுக எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது. பாஜக அடிமைகளாகவே அதிமுகவினர் இருக்கிறார்கள். ராஜன் செல்லப்பா அவருடைய கட்சியின் நிலையை முதலில் விளக்க வேண்டும். கரையும் கப்பலாகவும் உடைந்த மண் பாத்திரமாகவும் அதிமுக உள்ளது. அதிமுகவின் இறுதிக்காலம் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி சிந்திக்காமல் பிற கட்சிகளைப் பற்றி பேசுவதை ராஜன் செல்லப்பா  நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை வந்து சேர்ந்த ராஜ்நாத் சிங்; தமிழகத்திற்கு 450 கோடி அறிவிப்பு

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Rajnath Singh who arrived in Chennai; 450 crore announcement for Tamil Nadu

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 07.12.2023 தற்போது டெல்லியில் இருந்து வந்தடைந்தார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்து வருகிறார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

 

முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக 450 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

முதல்வருக்கு பறந்த போன் கால்; உறுதியளித்த பிரதமர்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Prime Minister Modi inquired from the Chief Minister of Tamil Nadu over phone

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில், புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். முன்னதாக புயல் பாதிப்புகளை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

 

அந்த கடிதத்தில், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கிறது. இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்கக் கோரியும், புயல், வெள்ள பாதிப்பு குறித்த முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் விவர செய்தி அறிக்கை அளிக்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

தமிழக முதல்வர் எழுதியுள்ள இந்த கடிதத்தை திமுக பாராளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு பிரதமர் மோடியிடம் இன்று நேரில் அளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்த உரையாடலில் தமிழகத்திற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்