/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1439.jpg)
மாநகராட்சி மற்றும் நகராட்சித்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் நேற்று (26.11.2021) துவங்கி நடைபெற்றுவருகிறது.
கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்.பி. வேலுமணியிடம் நேற்று கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர். அதைத் தொடர்ந்து நேற்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றிபெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கினர். திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து, கோவையில் சாலைப் பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Z5_2.jpg)
தற்போதைய அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்தாமல் முந்தைய அரசு மீது குற்றம் சாட்டிவருகிறது. என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டுவருகிறது. என் குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழித்துவருகின்றனர். என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை. ஆனால், கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை உடனடியாக சீர் செய்யாவிட்டால், ஒருவார காலத்திற்குள் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)