/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1335.jpg)
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைத் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கரின் சென்னை, இலுப்பூர் வீடுகள் முதல் அவரது அண்ணன் உதயகுமார் வீடு, கல்வி நிறுவனங்கள், கிரஷர் உள்ளிட்ட இடங்களிலும், அவரது உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களான அன்னவாசல் ஒன்றிய சேர்மன், இலுப்பூர் பேரூராட்சி மாஜி சேர்மன் குருபாபு, அன்னவாசல் சாலை மதுரம் வீடு மற்றும் புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம் வீடு, ஒப்பந்தக்காரர் சோத்துப்பாளை முருகேசன் வீடு, அதிமுக ந.செ பாஸ்கர், அவரது தம்பி நத்தம்பண்ணை ஊ.ம.தலைவர் பாபு, ஆலங்குடி தனசேகரன் வீடு என சுமார் 27 இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனை நடந்து வருகிறது.
அன்பானந்தம் வீட்டில் சோதனை முடிவடைந்த நிலையில் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறிச் சென்றனர். இந்த நிலையில், இலுப்பூரில் காலையிலிருந்து விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் திரண்டிருந்த நிலையில் மாலையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் போலீஸார் வரவழைக்கும் முயற்சிகளும் நடக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)