Skip to main content

“தம்பித்துரை கரூர் மக்களுக்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை” - ஜோதிமணி

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

கரூரில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, தம்பித்துரை கரூர் தொகுதிக்கு ஒரு சிறு துரும்பை கூட நகர்த்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் தலைமை சார்பில் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

 

jothimani

 

கரூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட வேடச்சந்தூர், விராலிமலை, மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவும், வாழ்த்தும் பெற்றார்.
 

இதனிடையே இன்று கரூர் தேர்தல் பணிமனையை, திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு, செந்தில்பாலாஜி, சின்னசாமி, கே.சி.பி, நன்னீயூர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் கலந்துகொண்டார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளரும், கரூர் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜோதிமணி, "மக்கள் கோபத்திலும், கொந்தளிப்பிலும் இருக்கிறார்கள். நரேந்திர மோடி அரசுக்கு எதிரான அலை தற்போது வீசுகிறது. 'இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன், விவசாய வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன், ரூபாயின் மதிப்பை உயர்த்துவேன்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கரூர் சிட்டிங் எம்.பி.தம்பித்துரை கரூர் மக்களுக்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை” என்று பேசினார். 

 

 

 

சார்ந்த செய்திகள்